மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தயாராகவேண்டிய தருணம்: சி.வி.குமார் காட்டம்

மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தயாராகவேண்டிய தருணம்: சி.வி.குமார் காட்டம்
Updated on
1 min read

மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தயாராகவேண்டிய தருணமாகவே கருதுவதாக மத்திய அரசின் அறிவிப்புக் குறித்து சி.வி.குமார் கருத்து

பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து நீக்கிய மத்திய அரசு, மத்திய அரசின் ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சி.வி.குமார், "காவிரி , முல்லை பெரியார் , மீனவர் பிரச்சனை , ஜல்லிக்கட்டு , மத்திய வேலைவாய்ப்பு தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு , வங்கி படிவங்களில் , தொடர் வண்டி பயண சீட்டுகளில் தமிழ் புறக்கணிப்பு , புதிய கல்வி கொள்கை , பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல போன்றவை தமிழர் மீதான திட்டமிட்ட தொடர் தாக்குதல்களாகவே தோன்றுகிறது.

வேறுபாடுகளை களைந்து நமது உரிமைகளுக்காக தமிழராய் ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தயாராகவேண்டிய தருணமாகவே கருதுகிறேன்" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in