

சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'அடங்காதே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ப்ரூஸ்லீ' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்து பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறது.
தற்போது புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'அடங்காதே'. சென்னை, வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது திருச்சியில் நடைபெற்று வருகிறது.
எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படத்தில் சரத்குமார், மந்திரா பேடி, சுரபி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டார். முந்தைய ஜி.வி.பிரகாஷ் படங்களை விட இப்படத்தின் லுக் வித்தியாசமாக இருப்பதாக சமூகவலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.