சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் இளையராஜா
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகி, 5 நாள் சிகிச்சைப் பிறகு இன்று காலை வீடு திரும்பினார் இசையமைப்பாளர் இளையராஜா.
சில நாட்களுக்கு முன்பு, இசைக் கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இளையராஜாவிற்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஐ.சி.யூவில் இருந்து ஸ்பெஷல் வார்டிற்கு இளையராஜா மாற்றப்பட்டு, அங்கு இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 5 நாட்கள் சிகிச்சை பிறகு இன்று இளையராஜா வீட்டிற்கு திரும்பினார்.
அதுமட்டுமன்றி, மலேசியாவில் நடைபெறும் KING OF KINGS இசை நிகழ்ச்சிக்கான பணிகளில் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, பவதாரிணி உள்ளிட்ட இளையராஜா குடும்பத்தினர் மலேசியாவில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், வீடியோ கான்பிரன்சிங் முறையில் இசை விழாவில் தோன்றி உரையாற்றுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
