

'புறம்போக்கு' படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியோடு இணைந்து நடிக்க ஷாம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆர்யா, விஜய் சேதுபதி, கார்த்திகா உள்ளிட்டவர்கள் 'புறம்போக்கு' படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். யு.டிவி நிறுவனம் தயாரிக்க, ஜனநாதன் இயக்க இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று குலுமணாலியில் தொடங்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூர், பிகானீர், பொக்ரான், ஜெய்சல்மீர் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.
இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்து முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஷாம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மூன்று நாயகர்கள் இருந்தாலும் நாயகி கார்த்திகா மட்டும் தான் என்கிறது படக்குழு.