பாலிவுட், ஹாலிவுட் என்று சொல்லாதீர்கள் : செல்வராகவன்!
பாலிவுட், ஹாலிவுட் என்று சொல்லாதீர்கள் என இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.
தீபாவளி வெளியீட்டில் இருந்து பின்வாங்கிய படம் 'இரண்டாம் உலகம்'. செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்திருக்கிறார்கள். தற்போது இப்படம் நவம்பர் 22ம் தேதி வெளியக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனுஷ்கா நடித்திருப்பதால், தெலுங்கிலும் இப்படம் 'வர்ணா' என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய அனைவருமே அனுஷ்காவை புகழ்ந்து தள்ளினார்கள்.
இயக்குநர் செல்வராகவன் “ பாலிவுட், ஹாலிவுட் என்று சொல்லாதீர்கள், இனி தென்னிந்திய சினிமா தான் பேசப்பட இருக்கிறது.
இயக்குநர் ராஜமெளலி மற்றும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இருந்து இயக்குநர்கள் என எல்லோரும் தென்னிந்திய திரையுலகை உலகளவில் கொண்டு போகப்போகிறார்கள். என் தங்கச்சி மாதிரி அனுஷ்கா. என் கூடப்பிறந்த தங்கச்சி கூட, என் மீது அனுஷ்காவைப் போல அக்கறை கொண்டதில்லை “ என்றார்.
நடிகர் ஆர்யா, “'இரண்டாம் உலகம் படத்தின் உண்மையான ஹீரோ நான் கிடையாது. அனுஷ்கா தான். “ என்றார்.
அனிருத் 'இரண்டாம் உலகம்’ படத்திற்கு பின்னணி இசை மட்டுமல்லாது, மூன்று பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அப்பாடல்கள் படத்தில் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
