கமல் வீட்டில் தீ விபத்து: தனக்கு பாதிப்பில்லை என கமல் தகவல்

கமல் வீட்டில் தீ விபத்து: தனக்கு பாதிப்பில்லை என கமல் தகவல்
Updated on
1 min read

கமலின் ஈசிஆர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தனக்கு பாதிப்பில்லை என்று கமல் ட்விட்டரில் தகவல்.

ஈசிஆரில் உள்ள கமல் வீட்டில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனது ஊழியர்களுக்கு நன்றி. எனது வீட்டில் நடந்த தீ விபத்தில் இருந்து தப்பினேன். நுரையீரல் முழுவதும் புகை. அப்படியே மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன்.

பாதுகாப்பாக இருக்கிறேன். யாருக்கும் அடிபடவில்லை. உங்கள் அக்கறைக்கும், அன்புக்கும் நன்றி. இப்போது தூங்கச் செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் கமல்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கமல் தரப்பில், "மூன்றாவது மாடியிலிருந்த ஃப்ரிட்ஜில் ஏற்பட்ட தீ விபத்து, பக்கத்து அறையிலிருந்த ஏசிக்கும் பரவியது. உடனடியாக ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு கமலை கீழே அழைத்து வந்தனர். சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்தவித பிரச்சினையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in