உன் பிரிவால் வாடுகிறேன் நண்பா: நா.முத்துக்குமார் மறைவுக்கு கமல் இரங்கல்

உன் பிரிவால் வாடுகிறேன் நண்பா:  நா.முத்துக்குமார் மறைவுக்கு கமல் இரங்கல்
Updated on
1 min read

ஒரு முக்கியமான தமிழ் கவிஞர், சினிமாவிலும் நிறைய எழுதினார். உன் பிரிவால் வாடுகிறேன் நண்பா என்று நா.முத்துக்குமார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 41.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன், "நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை நா.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம் பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கும் நன்றி.

ஒரு முக்கியமான தமிழ் கவிஞர், சினிமாவிலும் நிறைய எழுதினார். உன் பிரிவால் வாடுகிறேன் நண்பா. புத்தகங்களில் நீ விட்டுச் சென்ற உன் எழுத்துக்களுக்காக நன்றி. பாதி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்திருப்பாய் என நம்புகிறேன், இனி உன் படைப்புகளை நாங்கள் அனுபவிக்கப் போவதைப் போல! " என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in