

தமிழ்த் திரையுலகில் தற்போது வித்தியாசமான கதைக் கருவுடன் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் ஒரு மீனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து ‘கட்டப்பாவ காணோம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மணி செய்யோன். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்த அவரிடம் பேசியதில் இருந்து..
‘பாகுபலி’ படத்தில் சத்யராஜின் கதாபாத்திரப் பெயரான கட்டப் பாவை படத்தின் தலைப்பாக வைத்தது ஏன்?
மீனை மையப்படுத்திய படமாக இருந்ததால், முதலில் இப்படத் துக்கு ‘தண்ணி ராஜா’ என்றுதான் பெயர் வைத்திருந்தோம். இதைக் கேட்ட பலரும் ‘இது சரக்கைப் பற் றிய படமா?’ என்று கேட்டார்கள். இதைத் தொடர்ந்து படத்தின் பெயரை மாற்ற முடிவெடுத்தோம். சமீபகாலமாக மக்கள் எதைப் பற்றி நிறைய பேசுகிறார்களோ, அதில் இருந்து தலைப்பு வைக்கலாம் என விவாதித்தோம். அப்போது சிபிராஜ் சார்தான் ‘கட்டப்பா’ என்று வருகிற மாதிரி தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும் என்றார். இப்படத்தில் மீனின் பெயர் ‘கட்டப்பா’ என்பதால் படத்துக்கு ‘கட்டப்பாவ காணோம்’ என்று பெயர் வைத்தோம்.
மீனை மையமாக வைத்து படம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?
நான் வீட்டில் மீன்களை வளர்த்து வருகிறேன். புதுமை யாக ஒரு படம் பண்ண வேண் டும் என்ற யோசனை எனக்கு இருந் தது. யானை, நாய் பின்னணியில் நிறைய படங்கள் வந்துள்ளன. நான் வாஸ்து மீனின் பின்னணியில் பண்ணியிருக்கிறேன். முதலில் நமக்குப் பிடித்த விஷயத்தில் இருந்துதான் உத்வேகம் வரும். அப்படித்தான் எனக்கு இப்படத் தின் கதைக் கரு கிடைத்தது. இதற் காக வாஸ்து மீன் ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு 'கட் டப்பா' என பெயர் சூட்டி இப்படத் தில் பயன்படுத்தி இருக்கிறோம்.
இது குழந்தைகளுக்கான படமா?
இல்லை. ஃபேண்டஸி, ப்ளாக் காமெடி என அனைத்துமே இதில் கலந்துள்ளது. ‘சூது கவ்வும்’, ‘நேரம்’ படங்களைப் போன்று இப்படத்தின் திரைக்கதை அமைப்பு இருக்கும்.
த்ரில்லர் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு முதல் படமாக காமெடி படத்தை எடுக்கிறீர்களே?
நான் தனியாக படம் பண்ண வேண்டும் என்று எண்ணியவுடன், அறிவழகன் சாரிடம் இருந்து வித் தியாசப்பட்டு பண்ணவேண்டும் என்று நினைத்தேன். அவரைப் போலவே படம் பண்ணினால் அதே அடையாளம் வந்துவிடும் என்று கருதினேன். மேலும் முதல் படத்தைக் கொஞ்சம் எளிமையாக பண்ண விரும்பினேன். இன் றைக்கு மக்கள் ரிலாக்ஸ் பண் ணிக் கொள்ளத்தான் திரையரங் குக்கு வருகிறார்கள். காமெடி படங்களைத்தான் மக்கள் அதிகம் ரசிக்கிறார்கள். அதனால் காமெடி படத்தை எடுக்க திட்டமிட்டேன்.
உங்கள் குருநாதர் அறிவழகனிடம் இருந்து கற்றுக் கொண்ட விஷயங் கள் என்ன?
அனைவருமே செல்லும் வழி யில் இல்லாமல் புதுமையான வழி யில் அவர் செல்வார். அதைத்தான் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். செய்யும் தொழிலில் நேர்மையாகவும் அர்ப்பணிப் போடும் இருக்க வேண்டும் என் பதையும் கற்றுக் கொண்டேன்.
உதவி இயக்குநர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார். அத னால்தான் 2 படங்கள் பணியாற்றி விட்டு என்னால் தனியாக படம் பண்ண முடிந்தது. அவர் எனக்கு அளித்த சுதந்திரத்தை நான் என் னுடைய உதவி இயக்குநர்களுக்கு கொடுத்திருக்கிறேன்.
- இயக்குநர் மணி செய்யோன்