

'ஹிப் ஹாப் தமிழா' ஆதியின் கருத்து குழப்பம் அளிக்கிறது என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் திசைமாறி செல்வதாக 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் சமுத்திரக்கனி " 'ஹிப் ஹாப்' தமிழா ஆதியின் கருத்து குழப்பம் அளிக்கிறது. யார் சூழ்ச்சி செய்தாலும் அதனை நாம் தான் அதை முறியடிக்க வேண்டும். போராட்டத்தில் உடன்பாடு இல்லாத பட்சத்தில் அமைதியாக இருங்கள்.
மக்கள் கூடும் இடத்தில் குழப்பவாதிகள் கூடத்தான் செய்வார்கள். அதனை நாம்தான் முறியடிக்க வேண்டும். 4 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். போராட்டக்காரர்கள் சரியாகத்தான் செயல்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.