

நூற்றுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் அசோக் குமார், உடல் நலக் குறைவால் சென்னையில் இன்று காலாமானார்.
சென்னை மற்றும் ஹைதராபாத் மருத்துவமனைகளில் கடந்த 6 மாதங்களாக அசோக் குமார் தீவிர சிகிச்சை பெற்று வந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜீன்ஸ், மன்னன், சூரியன், நடிகன், ஜானி உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் படங்களில் பணியாற்றியவர் அசோக் குமார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளர் தேசிய விருதையும் அசோக் குமார் பெற்றுள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
அன்று பெய்த மழை (தமிழ்), அபிநந்தனா (தெலுங்கு), காமாக்னி (இந்தி) உள்ளிட்ட திரைப்படங்களை அசோக் குமார் இயக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.