மக்களோடு களம் இறங்குங்கள்: ரஜினிக்கு சேரன் வேண்டுகோள்

மக்களோடு களம் இறங்குங்கள்: ரஜினிக்கு சேரன் வேண்டுகோள்
Updated on
1 min read

நீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களம் இறங்குங்கள் என்று ரஜினிக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சென்னையில் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். மே 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ரசிகர்கள் மத்தியில், அரசியலில் தன்னுடைய நிலைப்பாடு மற்றும் தன்னைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி பேசினார்.

ரஜினியின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து இயக்குநர் சேரன் "வணக்கம் சார்.உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும்.. மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் ஜாக்கிரதை.

களவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா. உங்களுக்கு பொய்யே பேசவராதே.

கர்நாடகாவை எதிர்க்கவேண்டும் இந்தி திணிப்பை ஆதரிக்ககூடாது. இலவசங்கள் கொடுத்தே ஆகவேண்டும். மதுக்கடைகள் மூடக்கூடாது. சவால்கள் நிறைய. நீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களம் இறங்குங்கள். கலந்து பேசுங்கள். ஒவ்வொரு பகுதியாக பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்" என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in