

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாட்டுப்பாடி அதை வலைதளத்தில் (யூ-டியூப்) வெளியிட்டதற்காக இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஒருவர் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.
சென்னை காவல் ஆணையர் ஜார்ஜிடம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து பாடியுள்ள ஒரு ஆங்கில பாடல், யூ-டியூபில் வெளி வந்துள்ளது. அந்தப் பாடலின் வரி களும் சப்-டைட்டில்போல கீழே வருகிறது. பாடல் வரிகள் முழு வதும் பெண்களை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளன. சில இடங்களில் தாய்மையையும் இழிவுபடுத்தும் விதமாக பாடல் வரிகள் உள்ளன. இதைக் கேட்பதற்கே அருவருப் பாக உள்ளது. பாடலைக் கேட்ட பெண்கள் அனைவருமே முகம் சுளிக்கின்றனர்.
இப்படி ஒரு கீழ்த்தரமான பாடலை எழுதி, இசையமைத்து, பாடி, அதை வெளியிட்ட அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்தப் பாடலை யூ-டியூபில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
புகார் கொடுத்த பின்னர் நிருபர் களிடம் ஜெபதாஸ் பாண்டியன் கூறுகையில், ‘‘அனிருத்தின் செயல் களால் யூ-டியூபில் வெளியாகும் வீடியோ காட்சிகளையும் தணிக்கை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அசிங்கமான வார்த்தைகளால் பாடல் பாடியுள்ள அனிருத், அதை நியாயப்படுத்தி பேஸ்புக், டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சமுதாயத்தை சீரழிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. புகாரை பெற்றுக் கொண்ட ஆணை யர், உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்’’ என்றார்.
மனித உரிமை ஆர்வலர் சுதா ராமலிங்கம் கூறும்போது, ‘‘தனது கருத்தை தெரிவிக்க அனைவருக் கும் உரிமை உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க சரியான இடங்களாக உள்ளன. ஆனால், இதில் தவறான சிந்தனைகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.