உண்மையான குடியரசின் சுவையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்: கமல்

உண்மையான குடியரசின் சுவையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்: கமல்
Updated on
1 min read

உண்மையான குடியரசின் சுவையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர் என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போராட்டம் குறித்து கமல், "பீட்டாவே.. ட்ரம்ப் ஆளும் அமெரிக்காவில் நடக்கும் காளை விளையாட்டை (bull riding) தடை செய்யுங்கள். உங்களால் எங்கள் காளைகளை கட்டுப்படுத்த முடியாது.

சாம்ராஜ்யங்களே இந்தியாவை விட்டு விரட்டப்பட்டன. உண்மையான குடியரசின் சுவையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். தலைவர்களுக்கான நாட்கள் கடந்துவிட்டன. வழிகாட்டுவோரும் சமுதாயப் புரட்சியாளர்களும் நமக்கு வேண்டும்.

அமெரிக்காவின் குளிர்பான தயாரிப்பாளர்கள் எங்கள் ஜல்லிக்கட்டை விளம்பரப்படுத்தும்படி ஆகிவிடலாம்!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in