பிரச்சினைகளுக்கு தீர்வு: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் வெளியானது

பிரச்சினைகளுக்கு தீர்வு: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் வெளியானது
Updated on
1 min read

'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்' பட வெளியீட்டுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டு படம் வெளியானது.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்' இன்று(ஜூன் 23) வெளியாகவிருந்தது. KDM எனப்படும் QUBE KEY வராததால், காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக திரையரங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் மட்டுமே பிரச்சினை எழுந்துள்ளது. விரைவில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டு வெளியாகும் என தெரிவித்தார்கள். இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர சிம்புவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். இறுதியில், அனைத்து பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டு அனைத்து திரையரங்குகளுக்கு KDM எனப்படும் QUBE KEY அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதலில் சென்னையிலுள்ள திரையரங்குகளுக்கு அனுப்பட்டுள்ளதால், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' காட்சிகள் தொடங்கப்பட்டன. இதனால், சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தார்கள்.

'வனமகன்' படத்துக்கும் இதே போன்று பிரச்சினை ஏற்பட்டு, காலை 10 மணிக்கு தீர்க்கப்பட்டு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in