அஜித், கௌதம் மேனன் கூட்டணியில் ஹாரிஸ் ஜெயராஜ்

அஜித், கௌதம் மேனன் கூட்டணியில் ஹாரிஸ் ஜெயராஜ்

Published on

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்திற்கும் இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

'வீரம்' படத்தினைத் தொடர்ந்து, கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் அஜித். இப்படத்தினை 'ஆரம்பம்' படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்தே, படத்தினைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அனுஷ்கா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இசையமைப்பாளர் யார் என்ற செய்திகள் இணையத்தினை வட்டமிட்டன. அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றன. தற்போது படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாக இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

இவ்வார இறுதியில் படத்தின் தலைப்பு, நாயகி, இசையமைப்பாளர் என அனைத்தையும் முறைப்படி அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தலாமா, இல்லையென்றால் எப்படி செய்யலாம் என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in