எஸ். ஜானகியுடன் பாடிய தனுஷ் !

எஸ். ஜானகியுடன் பாடிய தனுஷ் !

Published on

வெகு மாதங்கள் கழித்து, 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்காக தனுஷ் உடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி.

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். 'WHY THIS KOLAVERI' பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமானது தனுஷ், அனிருத் கூட்டணி.

அதனைத் தொடர்ந்து 'எதிர் நீச்சல்', ‘வணக்கம் சென்னை’ என இளைஞர்கள் மத்தியில் அனிருத்தின் படப் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில் தனுஷ் நடித்து, தயாரிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீண்ட நாட்களாக பாடாமல் இருந்த பிரபல பாடகி எஸ்.ஜானகி, இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து ஒரு மெலடிப் பாடலை பாடியிருக்கிறார்.

இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில், "எங்களது ‘வேலையில்லா பட்டதாரி’ படக்குழு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பிரபல பின்னணி பாடகி ஜானகியம்மா எங்களது படத்தில் என்னுடன் இணைந்து ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, ஆசிர்வதிக்கப்பட்டவன்." என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in