ரசிகர்களுக்கு போட்டி: இளையராஜா அறிவிப்பு

ரசிகர்களுக்கு போட்டி: இளையராஜா அறிவிப்பு
Updated on
1 min read

இசையமைப்பாளர் இளைய ராஜா, ரசிகர்களிடையே தனது இசை தொடர்பான போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் இசை யமைத்துள்ளவர் இசைஞானி இளையராஜா.

அவருக்கு கார்த்திக்ராஜா தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. அந்த ரசிகர் மன்றத்தின் அலுவலகம் சென்னை சாலிகிராமத்தில் இயங்கி வருகிறது. இந்நிலை யில் ரசிகர்களோடு தனது உறவை பலப்படுத்த ஒரு நேரடிப்போட்டியை நடத்த இளையராஜா திட்டமிட் டுள்ளார். இதுகுறித்து இளைய ராஜா `தி இந்து’விடம் கூறிய தாவது: ரசிகர்கள் என் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக் கிறார்கள்.

அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு போட்டியை நடத்த திட்டமிட் டுள்ளேன். இது எனக்கும் என் ரசிகர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் நான் இதுவரை இசையமைத்த பாடல்கள், அதைப் பாடியவர்கள், அவை இடம்பெற்ற படங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் திரட்டி அனுப்பவேண்டும்.

அந்த தகவல்களை என்னிடம் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருந்தால் பரிசு வழங்கப்படும். போட்டிக்காக தகவல்களைத் திரட்டி அனுப்பு பவர்கள் இன்றிலிருந்து நவம்பர் 30ம் தேதிக்குள் ஐ.எஃப்.சி (இளையராஜா ஃபேன்ஸ் கிளப்) 10ஏ, நாவலர் நெடும்பாதை, தேவராஜ் நகர், சாலிகிராமம், சென்னை - 93 என்ற முகவரிக்கு அனுப்பலாம். போட்டி முடிவுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும். இவ்வாறு இளையராஜா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in