ஜெய் ஒன்றும் அஜித் அல்ல: தயாரிப்பாளர் சிவா காட்டம்

ஜெய் ஒன்றும் அஜித் அல்ல: தயாரிப்பாளர் சிவா காட்டம்
Updated on
1 min read

படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியை தவிர்க்கும் முடிவை ஜெய் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சிவா காட்டமாக தெரிவித்தார்கள்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவா, ஜெய், வைபவ், விஜயலட்சுமி, மஹத், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'சென்னை 600028 2nd Innings'. வெங்கட்பிரபு மற்றும் சரண் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். யுவன் இசையமைத்திருக்கும் இப்படம் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் ஜெய், நிதின் சத்யா உள்ளிட்ட சிலர் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இப்படத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் சிவா பேசும் போது, "அஜித் சார் அவருடைய படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அதனை நானே விமர்சனம் பண்ணியிருக்கிறேன். ஆனால், அது தான் அவருடைய படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. அதனை நான் தாமதமாகத் தான் உணர்ந்தேன். திரையில் மட்டுமே அவரைக் காண முடியும்.

அஜித் சார் அந்த முடிவை ஒரு கட்டத்துக்கு வந்த பிறகு எடுத்தார். சில நடிகர்கள் உள்ளே வரும் போதே எடுத்தீர்கள் என்றால் யாருக்குமே தெரியாமல் போய்விடுவீர்கள். அதனை நான் யாரையும் திட்டுவதற்காகச் சொல்லவில்லை. எந்த காரணத்தின் அடிப்படையில் சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அஜித் சார் இடத்துக்கு வருவதற்கு நிறைய உழைப்பு வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அப்போது பத்திரிகையாளர்கள் "நீங்கள் ஜெய்யைத் தான் குறிப்பிடுகிறீர்களா என நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு "ஆமாம் ஜெய்யை தான் சொல்கிறேன். அவர் இன்னும் வளர வேண்டும். வெங்கட்பிரபு படத்துக்கு அவர் அப்படி செய்திருக்கக் கூடாது. ஜெய்க்கு இந்த மேடை தேவை. அவர் நிகழ்ச்சிகளுக்கு வருவது, வராதது அவருடைய விருப்பம். அவரை வைத்து படம் பண்ணுவது குறித்து தயாரிப்பாளர்கள் தான் முடிவு பண்ண வேண்டும். அவர் திருந்துவார் என நம்புகிறேன்" என்று காட்டமாக தெரிவித்தார்.

</p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in