

மீண்டும் இணையவிருக்கும் 'மிருதன்' கூட்டணி படத்தின் தயாரிப்பாளர் மாறியிருக்கிறார்.
சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் 'மிருதன்'. இமான் இசையமைத்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது. வசூல் ரீதியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'மிருதன்' படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் மற்றும் ஜெயம் ரவி இணைந்து படம் பண்ணவிருக்கிறார்கள். இப்படத்தை முதலில் கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவி உடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டன.
தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் மாறியிருக்கிறது. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு பதிலாக ஜபக் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.
தற்போது நடித்து வரும் 'போகன்' படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ஜெயம் ரவி.