

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'சத்ரியன்', மே 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த படம் 'முடிசூடா மன்னன்'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.
இறுதிகட்ட படப்பிடிப்பின் போது, 'ஆலயம்' தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்று 'சத்ரியன்' என படத்துக்கு தலைப்பை மாற்றியது படக்குழு. பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியிடப்பட்டன.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். 'யு' சான்றிதழ் கிடைத்தவுடன், சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது படக்குழு.
தற்போது மே 19-ம் தேதி 'சத்ரியன்' வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.