

சி.எஸ்.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை மையப்படுத்தி படமொன்றை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.
'விசாரணை' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நாயகனாக நடிக்கும் 'வடசென்னை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன். அப்படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதனிடையே சி.எஸ்.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலின் உரிமையை கைப்பற்றியுள்ளார் வெற்றிமாறன். விரைவில் அதனை முன்வைத்து படமொன்றை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே, 'லாக்கப்' என்ற நாவலை மையப்படுத்தி 'விசாரணை' என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.