

விக்ரமின் மகள் அக்ஷிதா மற்றும் மனு ரஞ்சித் இருவரின் நிச்சயதார்த்தம் ஜூலை 10ம் தேதி நடைபெற இருக்கிறது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இருமுகன்'. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் இருந்து சிறு இடைவெளி எடுத்து தனது மகளின் நிச்சயதார்த்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார் விக்ரம்.
விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், மனு ரஞ்சித் என்பவருக்கு ஜூலை 10ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற இருக்கிறது. இதில் திரையுலகினர் இன்றி இரு குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 2017ம் ஆண்டில் தான் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு மொத்த திரையுலகினரையும் அழைக்க திட்டமிட்டு இருக்கிறார் விக்ரம்.
கேவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன்தான் மனு ரஞ்சித். இவரது தாயார், திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.