

கெளதம் கார்த்திக் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படத்துக்கு 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ஆறுமுககுமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. படத்தின் தலைப்பு இறுதி செய்யாமல் தொடங்கப்பட்ட படப்பிடிப்புக்கு தற்போது 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' என தலைப்பிட்டுள்ளது படக்குழு.
மேலும், "'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' என்ற தலைப்பு படத்தில் முக்கியமான இடத்தில் வரும். ஆகவே, அதையே தலைப்பாக இறுதி செய்தோம். காமெடி கலந்த ஆக்ஷன் கதையாகும். கதை அனைவருக்குமே தெரிந்தது என்றாலும், கதை நடக்கும் களம் மிகவும் புதுமையாக உருவாக்கியுள்ளோம்.
40% படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது. தற்போது அடர்ந்த காடுகளுக்குள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு வருகிறோம்" என்று தெரிவித்தது படக்குழு.