ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை
Updated on
1 min read

ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு, எச்சரிக்கை அளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை ரஜினி வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் தனது 5 மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். விரைவில் அடுத்தடுத்த மாவட்டங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

ரசிகர்களுடனான சந்திப்பின் போது ரஜினி பேசிய பேச்சுகள், அரசியல் தலைவர்கள் மத்தியில் பேசு பொருளாக காணப்படுகிறது. பலரும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ரஜினியின் போயஸ் கார்டன் வீடு மற்றும் சென்னையைச் சுற்றி அவ்வப்போது ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, "அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு இக்கடிதம் மூலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க தலைமை மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன்" என்று ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in