

சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற, ஒரு போலீஸ் என்கவுண்டர் கதையை 'வேளச்சேரி' என்கிற பெயரில் படமாக்க இருக்கிறார்கள்.
சில வருடங்களாக, நாயகனாக நடிக்காமல் முக்கிய வேடத்தில் மட்டுமே நடித்து வந்த சரத்குமார், மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் படம் 'வேளச்சேரி'.
சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற, ஒரு போலீஸ் என்கவுண்டரை மையமாக வைத்து, திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர் வேந்தன். சரத்குமார் ஜோடியாக இனியா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படம் குறித்து வேந்தன், “'வேளச்சேரி' படம் ஒரு நிஜக்கதையாகும். சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற போலீஸ் என்கவுண்டரை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறேன்.
சில வருடங்களாக போலீஸ் கதைகள் வந்தாலும், யாருமே என்கவுண்டரை கதையை படமாக பண்ணியதில்லை. முதல் படமாக இந்த கதையை மையமாக வைத்து பண்ணலாம் என தோன்றியது.
சரத்குமார் நிறைய போலீஸ் கதையில் நடித்திருக்கிறார். அவரை மக்களும் அந்த வேடத்தில் நடிப்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவரும் இந்தக் கதையை கேட்டவுடன் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார்.” எனக் கூறினார்.
இப்படத்தில் சரத்குமார் என்கவுண்டர் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.