

'ரேணிகுண்டா' இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
'ரேணிகுண்டா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பன்னீர்செல்வம். அதனைத் தொடர்ந்து '18 வயசு' படத்தையும் இயக்கினார். அவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது அக்கதையில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பன்னீர்செல்வம். "விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனால், அவர் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை" என்று படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவக்கத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் படக்குழுவினர் ஒப்பந்தம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.