

ரேஷ்மி மேனனுடன் எந்தவொரு கருத்து வேறுபாடுமில்லை என பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22ம் தேதி பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்தைத் தொடர்ந்து ரேஷ்மி மேனன் நடிப்பதை நிறுத்திவிட்டு, பாபி சிம்ஹாவின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்தார்.
சில நாட்களாக சமூகவலைத்தளத்தில் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து பெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து இருதரப்பினரும் விளக்கம் அளிக்காமல் இருந்தார்கள்.
இந்நிலையில், பாபி சிம்ஹா தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் "பிரிந்து விட்டதான வதந்திகளுக்கு விடையளிக்கவில்லை. ஆனால் ‘நாங்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டோம்’ என்று எங்களை அழைத்தவர்களின் அக்கறைகளுக்காக விடையளிக்கிறேன். நாங்கள் பிரித்து சாப்பிடுவது வெறும் பிட்சாவை மட்டுமே" என்று தெரிவித்திருக்கிறார்.