

அர்னால்ட், ரஜினி, புனித் ராஜ்குமார், ராணா உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் ஷங்கரின் 'ஐ' படத்தி ன் இசை வெளியீட்டு சென் னையில் இன்று மாலை நடைபெற இருக்கிறது.
விக்ரம், எமி ஜாக்சன், உபன் பட்டேல் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஷங்கர் இயக்கியிருக்கும் படம் 'ஐ'. இந்தியளவில் அதிக பொருட் செலவில் தயாராகி வரும் படம் என்பதால், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், படத்தின் இசையினை வெளியிட பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்ற அர்னால்ட் இன்று காலை சென்னைக்கு வந்துள்ளார்.
சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் இன்று மாலை பிரம்மாண்டமாக 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'ஐ' படத்தின் பாடல்களை அர்னால்ட் வெளியிடு கிறார்.
இந்த விழாவில் ரஜினி, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர் களோடு ‘ஐ' படக்குழுவினர் மற்றும் தமிழ் திரையுலகின் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.