Published : 28 Sep 2018 08:59 am

Updated : 28 Sep 2018 08:59 am

 

Published : 28 Sep 2018 08:59 AM
Last Updated : 28 Sep 2018 08:59 AM

ஜீ தமிழ் நடத்தும் ‘குடும்ப விருது’ தேர்தல்

ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் 10-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக, முதன்முறையாக ‘ஜீ தமிழ் குடும்ப விருதுகள்’ என்ற விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி, சேனலின் வெற்றிக்கு துணைநின்ற திறமையாளர்கள், குறிப்பாக, ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’, ‘சரிகமப’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ உள்ளிட்ட ரியாலிடி நிகழ்ச்சிகளும், ‘செம்பருத்தி’, ‘யாரடி நீ மோகினி’, ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’, ‘பூவே பூச்சூடவா’ உள்ளிட்ட நெடுந்தொடர்களின் பின்னணியில் உறுதுணையாக நிற்பவர்கள் கவுரவப்படுத்தப்படுகின்றனர்.

இந்த விழா சென்னையில் அக்டோபர் 13-ம் தேதி  மாலை மிகவும் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதுகுறித்து  ஜீ தமிழ் குழுமத்தின் தென்னிந்திய பிராந்திய தலைவர் சிஜு பிரபாகரன் கூறியபோது, ‘‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி, பொழுதுபோக்கும் விதமாக நிகழ்ச்சிகளை தரவேண்டும் என்பதே ஜீ தமிழ் சேனலின் நோக்கம். அதில் தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் புதுமையான நிகழ்ச்சிகளைக் கொடுப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறோம். ஜீ தமிழ் குடும்பம் விருதுகளுக்கு நேயர்களின் மனம் கவர்ந்த நடிகர், நடிகை, வில்லி, பிடித்த ஜோடி, பிடித்த தொகுப்பாளர், சிறந்த நெடுந்தொடர் என பல்வேறு  பிரிவுகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு நேயர்கள் வாக்களிக்கலாம். சேலம், திண்டுக்கல், கடலூர், தேனி என பல்வேறு நகரங்களுக்கு ஜீ தமிழ் வாகனம் நேரடியாக வாக்கு சேகரிக்கவும் வர இருக்கிறது’’ என்றார். இந்த விருது விழா, தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author