

முல்லை நகர் கிராமத்தில் கள் இறக்கும் தொழில் செய்பவர் மயில்சாமி. அவரது மகனான ‘அட்டகத்தி’ தினேஷ், தந்தையின் தொழிலுக்கு ஒத்தாசையாக இருக் கிறார். அதே ஊரின் அடாவடி அரசியல்வாதி தினா. அவ ருக்கும் அவரது கட்சியின் மாவட்டச் செயலாளர் ராதா ரவிக்கும் ஆகாது. அந்த ஊரில் மதுக்கடையை ஏலம் எடுக்கிறார் தினா. அதற்கு மயில் சாமியின் கள் இறக்கும் தொழில் இடைஞ்சலாக இருப்பதால், போலீஸ் மூலம் மயில்சாமிக்கு தொந்தரவு கொடுக்கிறார். இதையடுத்து, தன் தந்தையை அரசியல்வாதி ஆக்கும் நோக்கத்தில், ராதா ரவியின் உதவியை நாடு கிறார் தினேஷ். அவரும் மயில்சாமியை அரசியல்வாதி யாக்க உதவுவதாகக் கூறி, தினாவை கொல்ல தினேஷை கொம்பு சீவிவிடுகிறார். பயந்த சுபாவம் உள்ள தினேஷ், தினாவைக் கொல்ல ஒத் திகை பார்க்கும் சமயத்தில், சாலையில் பலத்த காய மடைந்த நிலையில் கிடக் கிறார் தினா. தினேஷ் மீது பழி விழுகிறது. போலீஸில் சிக்குகிறார். அவரைக் காப் பாற்றாமல் ராதாரவியும் நழுவு கிறார். ஜாமீனில் வெளியே வரும் தினேஷ் என்ன செய் தார்? அவர் எப்படி அரசியல் அவதாரம் எடுத்தார் என்ற நகர்வுகளின் தொகுப்புதான் மீதிக் கதை.
இயக்குநர் வெற்றி மாற னின் தயாரிப்பில் உருவாகி யுள்ள படம், உள்ளூர் அரசி யலிலும் அரசியல்வாதி களிடமும் நிறைந்திருக்கும் சூது வாதுகளைப் பேசுகிறது. ஊரில் நடக்கும் சாவில் தொடங்கி, போஸ்டர் ஒட்டு வது, பேனர் கட்டுவது வரை எல்லாவற்றிலும் இருக்கும் உள்ளூர் அரசியல், அர சியல்வாதிகளிடம் நிறைந்
திருக்கும் ஈகோ ஆகியவற்றை அதிகம் மிகைப்படுத்தாமல் எதார்த்தமாக காட்டி யிருக்கிறார் அறிமுக இயக் குநர் ராஜ்குமார். சாதி அரசியல் என்ற அஸ்திரத்தை கையில் எடுக்காமல், அரசியல் ரவுடியிஸத்தை முன்வைத்து அதில் நகைச்சுவையையும் கலந்து திரைக்கதை அமைத் திருப்பது படத்துக்கு பலம். தவிர, அரசியல் களம் என்ப தால் வெட்டுக்குத்து, ரத்தம், அநியாயத்துக்கு அடிதடி என சீரியஸாக இல்லாமல் காமெடி, எமோஷன் பின்னணி யில் கதை சொன்ன விதம் அருமை.
படத்தின் ஆரம்பத்தில் வரும் காதல் காட்சிகள் நல்ல பொழுதுபோக்கு. முதல் பாகத்தில் மதுவும், நண்பர் களுமாகத் திரியும் தினேஷ், இரண்டாம் பாகத்தில் அரசி
யல் அவதாரம் எடுக்கிறார்.
ஆனால், அந்த அவதாரத் துக்கான காரணங்கள் அரைத்த மாவு. பனை மரத்தில் ஏறி, கள் இறக்குகிற தொழிலாளியாகத் தொடங்கி, நாயகி மஹிமா வுடன் ரொமான்ஸ், பின்னா ளில் சிறைக்குப் போய்விட்டு திரும்புவது, மாவட்ட இளை ஞர் அணிச் செயலாளர் என விதவிதமாக கலக்கியிருக் கிறார் தினேஷ். அதிலும் தன்னை இளைஞர் அணிச் செயலாளர் மட்ட சேகராக அடையாளப்படுத்தி நடிக்கும் இடங்களிலும், தனி பங்களா வுக்குள் சிக்கிக்கொள்ளும் போது நடக்கும் சண்டைக் காட்சியிலும் ரசிக்க வைக் கிறார்.நாயகி மஹிமா பிளஸ்2 தேர்வில் தோல்வியாகி டுடோரியல் கல்லூரிக்கு போவதும், இடையிடையே பேண்ட் வாத்தியக் குழுவில் வேலை செய்வதுமாக இருக் கிறார். இது படத்துக்கு பொருந்தாவிட்டாலும், இரு வருக்குள் நடக்கும் காதல்ஊடல்கள் ரசிக்க வைக் கின்றன. மஹிமாவின் வீட்டுக் குள் வந்து மாட்டிக்கொள்ளும் தினேஷின் ரொமான்ஸ் கட் டங்கள் கைதட்டல் அள்ளு கிறது.அலட்டல் இல்லாத அரசியல்வாதியாக நடித் திருக்கிறார் ராதாரவி. ஆனால், பல காட்சிகளில் அவரது முந்தைய படங்களின் சாயல். காமெடியில் இருந்து விலகி குணச்சித்திரத்துக்கு தாவியிருக்கிறார் மயில்சாமி. மகனுக்காக உருகுவது, மகன் அரசியல்வாதியாகும்போது பயப்படுவது என தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். தினாவின் அடாவடி அரசிய லுக்கு அவரது உடல்மொழி கச்சிதம்.
கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தங்கள் குடும் பத்தைக்கூட கவனிக்காமல் அரசியலே கதியென்று கிடப் பது, பார் ஒப்பந்தம் எடுத் துக்கொண்டு அடாவடியில் ஈடுபடுவது, பதவிக்காக கட்சி மாறுவது என எதார்த்த அரசியல் நிகழ்வுகள் ஆங் காங்கே காமெடியாக இடம் பெறுவதால், திரைக்கதை சோர்வின்றி நகர்கிறது.
அரோல் கொரேலியின் பாடல்கள், பின்னணி இசை அருமை. ‘நான் மட்ட சேகரு’, தேவா பாடியுள்ள ‘தாறு மாறா மனசு’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவும், ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பும் படத்தின் ஓட்டத்துக்கு பெரிய பலம்.
கலகலப்பான அரசியல், ரசனையான ரொமான்ஸ், அர்த்தம் படர்ந்த எமோஷன்ஸ் ஆகியவற்றோடு, உள்ளூர் அரசியல்வாதிகளை பல விதங்களில் தோலுரித்துக் காட்டிய இந்த அண்ணனுக்கு நிச்சயம் ‘ஜே’ போட லாம்.