இசைக் கலைஞராக விஜய் சேதுபதி: படப்பிடிப்பு தொடக்கம்

இசைக் கலைஞராக விஜய் சேதுபதி: படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

இசைக் கலைஞராக விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 14) தொடங்கப்பட்டுள்ளது.

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'சிந்துபாத்' வரும் 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். 'கடைசி விவசாயி', 'சங்கத்தமிழன்', 'லாபம்', 'க/பெ ரணசிங்கம்' ஆகிய படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 14) தொடங்கப்பட்டது. இதில் அமலா பால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை பழநியில் எஸ்.பி.ஜனநாதன் தொடங்கி வைத்தார்.

இந்தப் படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கதையில் சர்வதேச அளவிலான பிரச்சினை பேசப்படவுள்ளது.  இதில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் முன்னணி கதாநாயகி மற்றும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இதற்கான தேர்வும் நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in