3டி-யில் உருவாகிறது ‘தில்லுக்கு துட்டு 3’

3டி-யில் உருவாகிறது ‘தில்லுக்கு துட்டு 3’
Updated on
1 min read

‘தில்லுக்கு துட்டு 3’ படத்தை 3டி-யில் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சந்தானம் நடிப்பில் 2016-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘தில்லுக்கு துட்டு’. ராம்பாலா இயக்கிய இந்தப் படத்தில், கருணாஸ், ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி, சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்தனர். காமெடி பேய்ப்படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, ‘தில்லுக்கு துட்டு 2’ படம் தயாரானது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படமும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. எனவே, இதன் மூன்றாம் பாகத்தை எடுக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த முறை 3-யில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

18 ரீல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செளத்ரி, இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டகால்டி’ படத்தையும், சந்தானத்துடன் சேர்ந்து இவர்தான் தயாரித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த், ‘டகால்டி’ படத்தை இயக்கியுள்ளார். யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ படம், நீண்ட நாட்களாக ரிலீஸ் பிரச்சினையில் சிக்கித் தவிப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in