

'கொலையுதிர் காலம்' என்ற தலைப்பில் நயன்தாரா நடித்துள்ள படத்தை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு 'விடியும் முன்' இயக்குநர் பாலாஜி குமார் வாங்கி உரிமை பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் 'கொலையுதிர் காலம்' என்ற பெயரில் எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள படத்தை ஜூன்14-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக விளம்பரங்கள் வெளியாகின.
தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் 'கொலையுதிர் காலம்' என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே 'கொலையுதிர் காலம்' என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்
இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 'கொலையுதிர் காலம்' என்ற பெயரில் நயன்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து மனுவுக்கு ஜூன் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.