வாணி போஜனுக்குப் பதில் சரண்யா

வாணி போஜனுக்குப் பதில் சரண்யா
Updated on
1 min read

'என் 4’ படத்தில் வாணி போஜனுக்குப் பதில் சரண்யா நடிக்கவுள்ளார்.

லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகும் படம் ‘என் 4’. வடசென்னையிலுள்ள காசிமேட்டை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளது. தர்ம்ராஜ் ஃபிலிம்ஸ் மற்றும் பியான்ட் த லிமிட் க்ரியேஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

‘பர்மா’ படத்தில் நடித்த மைக்கேல், இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சின்னத்திரை பிரபலம் வாணி போஜன் ஒப்பந்தமானார். ஆனால், அவரால் குறிப்பிட்ட தேதிகளில் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, அவர் படத்திலிருந்து விலகிவிட்டார்.

வாணி போஜனுக்குப் பதிலாக சரண்யா தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் இவர். அனுபமா குமார், அபிஷேக், வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ஓரின ஈர்ப்பாளர்களைப் பற்றி ‘My son is Gay’ என்ற முழுநீளப் படத்தை இயக்கியவர் லோகேஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in