

நடிகர் கார்த்தி - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையின் 'கைதி' திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு தரப்பு முடிவுசெய்துள்ளது.
'மாநகரம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'கைதி' என்ற திரைப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு நாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். நரைன், ரமணா, யோகிபாபு உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். கார்த்தி கடைசியாக நடித்த 'தேவ்' திரைப்படம் தோல்வியடைந்ததால் அடுத்து ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். அடுத்து விஜய் படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜுக்கும் இந்தப் படத்தின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.
ஜூலை 19 அன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.