ஹீரோவாகும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர்: படத்தை இயக்க ஜேடி - ஜெர்ரியுடன் பேச்சுவார்த்தை தொடக்கம்

ஹீரோவாகும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர்: படத்தை இயக்க ஜேடி - ஜெர்ரியுடன் பேச்சுவார்த்தை தொடக்கம்
Updated on
1 min read

லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க, இரட்டை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன். தன்னுடைய கடை விளம்பரத்தில் அவர் நடித்தபோது, அவருடைய புற அழகைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த விளம்பரத்தில் அவருடன் நடிகைகள் தமன்னா மற்றும் ஹன்சிகா இருவரும் அவருடன் சேர்ந்து நடித்தனர்.

ஆனால், விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார் சரவணன். எனவே, மக்களுக்கு நன்கு அறிமுகமான நபராக அவர் மாறியுள்ளார். திரைப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. ஆனால், யார் இயக்கம் என்பது உள்ளிட்ட எந்த விவரமும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சரவணன் ஹீரோவாக நடிக்கும் படத்தை, இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்குகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி படம் ரிலீஸாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரியிடம் கேட்டபோது, “பேச்சுவார்த்தையே இப்போதுதான் தொடங்கியுள்ளது. இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. உறுதியானபிறகு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்” என்றனர். ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கியுள்ள இவர்கள், ‘உல்லாசம்’ மற்றும் ‘விசில்’ என இரண்டு படங்களை இதுவரை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in