பிக் பாஸ் 3-ல் நானா? - அப்சரா ரெட்டி காட்டம்

பிக் பாஸ் 3-ல் நானா? - அப்சரா ரெட்டி காட்டம்
Updated on
1 min read

'பிக் பாஸ் 3'-ல் போட்டியாளராகவுள்ளார் என்று வெளியான செய்திக்கு அப்சரா ரெட்டி காட்டமாக பதிலளித்துள்ளார்.

விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.

வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, கடந்த இரண்டு வருடங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 2017-ம் ஆண்டு ஆரவ்வும், 2018-ம் ஆண்டு ரித்விகாவும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், மூன்றாவது சீஸன் ஜூன் 23-ம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. இதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இம்முறை சாந்தினி தமிழரசன், ரமேஷ் திலக், டி.ராஜேந்தர், ராதாரவி, கஸ்தூரி உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இதில் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டியின் பெயரும் இடம்பெற்றது.

இந்தச் செய்தி தொடர்பாக அப்சரா ரெட்டி தனது ட்விட்டர் பதிவில், “நான் பிக் பாஸ் தமிழில் கலந்து கொள்ளபோவதாக வரும் வதந்திகள் அனைத்தும் பொய். முதல் சீஸனுக்கு வந்த வாய்ப்பையே நான் மறுத்துவிட்டேன். மூன்றாவது சீஸனிலும் கலந்து கொள்ளப் போவதில்லை. ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. சில நம்பகமான செய்தி ஊடகங்களே இதை வெளியிடுகின்றன. இது போன்ற தவறான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in