யோகி பாபுவின் லுக்கை வைத்து காமெடி பண்ணுவதில் உடன்பாடில்லை: சித்தார்த்

யோகி பாபுவின் லுக்கை வைத்து காமெடி பண்ணுவதில் உடன்பாடில்லை: சித்தார்த்
Updated on
1 min read

யோகி பாபுவின் லுக்கை வைத்து காமெடி பண்ணுவதில் உடன்பாடில்லை என்று 'கூர்கா' இசை வெளியீட்டு விழாவில் சித்தார்த்  பேசினார்.

‘டார்லிங்’, 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', '100' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'கூர்கா' படத்தை இயக்கியுள்ளார் சாம் ஆண்டன். இதில் யோகி பாபு, சார்லி, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு நாயும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

4 Monkeys Studio தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சித்தார்த், கரு.பழனியப்பன், பாடகர் எஸ்.,பி.பி, எஸ்.பி.சரண் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

இந்த விழாவில் நடிகர் சித்தார்த் பேசும் போது, “ட்ரெய்லர் பார்த்துவிட்டு, சாம் ஆண்டனிடம் பேசினேன். ரொம்ப காமெடியாக இருக்கு என்றவுடன் படமும் அப்படித்தான் சார் இருக்கும் என்றார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை யோகி பாபு ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. மிகச் சிறந்த நடிகர். அவரோடு 2 படங்கள் பண்ணியிருக்கேன். ரொம்ப எதார்த்தமான ஒரு நடிகர்.

அவருடைய லுக்கை வைத்து பலரும் காமெடி பண்ணுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதுவும் ஒரு வகை தான் என்று ஏற்றுக் கொண்டு வெவ்வேறு வகையில் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார். யோகி பாபு கொஞ்சம் தன் உடம்பைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிகள் வந்தவுடன் கொஞ்சம் பொறுப்புகள் வரணும். நல்லா சாப்பிட்டு, தூங்குங்கள் அதற்காகத்தான் வேலை செய்கிறோம்.

வரும்காலத்தில் இன்னும் உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இன்று படம் தயாரிப்பது எளிது. ஆனால், அதை வெளியிடுவது ரொம்பக் கடினமான வேலையாக இருக்கிறது” என்று பேசினார் சித்தார்த்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in