அனைத்தையும் அரசியலாக்கக் கூடாது: பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

அனைத்தையும் அரசியலாக்கக் கூடாது: பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்
Updated on
1 min read

அனைத்தையும் அரசியலாக்கக் கூடாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

இந்தத் தேர்தலில் வாக்களித்துவிட்டு நடிகர் பிரகாஷ்ராஜ்  பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, “நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப் போட வேண்டியது என் கடமை. இந்தத் தேர்தலில் ஜெயிப்பவர்கள் இன்னும் நல்ல வேலை செய்யட்டும். நடிகர் சங்கக் கட்டிட வேலை சுமார் 70% வரை முடிந்துவிட்டது. ஒரு அணி அதில் வேலை செய்து கொண்டிருக்கிறது. பொறுமையாக இருக்க வேண்டும். சும்மா குற்றச்சாட்டு, அரசியல் என்று அனைத்தையும் அரசியலாக்கக் கூடாது. ஜெயித்தாலும், தோற்றாலும் நடிகர்களின் நலனைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு சங்கத்தினுடையது.

நான் எப்போதுமே ஒரு மாநிலத்தின் மொழியை ஆதரிப்பவன் தான். நடிகர்களுக்கு மொழி ஒரு தடையில்லை என்பதற்கு நானே ஒரு உதாரணம். கர்நாடக நடிகர் சங்கம், ஆந்திரா நடிகர் சங்கம் என்று ஒரு இருக்கும் போது தமிழ்நாடு நடிகர் சங்கம் என்பதையும் யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in