

விஷாலை நினைத்துப் பெருமையாக இருக்கிறது என்று அவருடைய தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.
இந்தத் தேர்தலில் வாக்களித்துவிட்டு விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, “விஷால் முதலில் இதைத் தொடங்கிய போது, கஷ்டமான வேலை. பார்த்து பண்ணுடா என்றேன். அதை ஒரு போட்டியுடன் எடுத்தான். கட்டிடத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறான்.
இப்போது கட்டிடத்தை 6 மாதத்தில் முடித்துவிடுவோம் என்று இரண்டு அணிகளுமே சொல்கிறார்கள். இப்போது பணத்தேவைக்காக நடிகர்களை வைத்து நிகழ்ச்சி அல்லது கிரிக்கெட் என்று விஷால் ப்ளான் பண்ணிக்கொண்டு இருக்கிறான். விஷாலை நினைத்துப் பெருமையாக இருக்கிறது” என்று பேசினார் ஜி.கே.ரெட்டி.