

‘பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் - இளன் கூட்டணி மறுபடியும் இணைகிறது.
இளன் இயக்கத்தில் கடந்த ஆண்டு (2018) ரிலீஸான படம் ‘பியார் பிரேமா காதல்’. ‘பிக் பாஸ்’ பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், ரைஸா வில்சன் இருவரும் இந்தப் படத்தில் ஜோடியாக நடித்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததோடு, படத்தையும் தயாரித்தார்.
இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மறுபடியும் ஹரிஷ் கல்யாண் - இளன் கூட்டணி இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்துக்குப் பிறகே ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இந்தியில் இயக்கத் திட்டமிட்டுள்ளார் இளன்.
தற்போது ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடித்துவரும் ஹரிஷ் கல்யாண், அடுத்ததாக ‘விக்கி டோனர்’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘தாராள ராஜா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், சசி இயக்கத்திலும் ஹரிஷ் கல்யாண் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.