அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’: முக்கியக் கதாபாத்திரத்தில் சஞ்சனா கல்ராணி

அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’: முக்கியக் கதாபாத்திரத்தில் சஞ்சனா கல்ராணி
Updated on
1 min read

அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் உருவாகும் படம் ‘பாக்ஸர்’. பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விவேக், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்துக்காக மலேசியா மற்றும் வியட்நாம் சென்று தற்காப்புக் கலைகளைக் கற்றுள்ளார் அருண் விஜய். ‘7-ம் அறிவு’ படத்தின் வில்லன் ஜானி ட்ரி நக்யென், அருண் விஜய்க்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார். மேலும், பீட்டர் ஹெய்னிடம் குத்துச்சண்டை பயிற்சியைப் பெற்றுள்ளார் அருண் விஜய்.

நிஜ குத்துச்சண்டை வீராங்கனையும் நடிகையுமான ரித்திகா சிங், இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். விளையாட்டுச் செய்திகளைத் தரும் நிருபராக அவர் நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை, சென்னையில் இன்று (ஜூன் 21) நடைபெற்றது.

இந்நிலையில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியாவார். கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள சஞ்சனா, இந்தப் படத்தின் மூலம் முதன்முதலில் தமிழில் அறிமுகமாகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in