

இன்று மாலையில், இசைநிகழ்ச்சியின் போது, முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் 76வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி, இன்று மாலை சென்னையில் பிரமாண்டமான இசை விழா நடைபெறுகிறது. இதில் எஸ்.பி.பி., ஜேசுதாஸ் உள்ளிட்ட பல பாடகர்கள் கலந்துகொண்டு பாடுகிறார்கள்.
இந்த நிலையில், இளையராஜா செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது:
இன்று என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள், வாழ்த்துச் சொன்னார்கள். நேரிலும் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
இன்று (2.6.19) மாலையில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், உங்களுக்கு ஓர் முக்கியமான அறிவிப்புக் காத்திருக்கிறது. அங்கே வந்தால் நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள். தெரிந்துகொள்வீர்கள். எல்லோருக்கும் நன்றி.
இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்.