

நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், சமந்தா, ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘நடிகையர் திலகம்’. இதில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் கதாபாத்திரத்தில் அவரது பேரன் நாக சைதன்யா நடிக்கிறார்.
நாகேஸ்வர ராவ், சாவித்ரி இணைந்து நடித்த படங்களின் பின்னணியில் உள்ள பல சுவாரசிய அம்சங்கள் இப்படத்தின் திரைக்கதையில் இடம்பெறுகிறது. இதனால், அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் கருதி அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நாக சைதன்யா.
சமந்தா - நாக சைதன்யா இருவரும் திருமணத்துக்குப் பிறகு, தெலுங்கு இயக்குநர் ஷிவ நிர்வனாவின் புதிய படத்தில் இணைந்து நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தமான நிலையில், ‘நடிகையர் திலகம்’ படத்திலும் இணைகிறார்கள். ஆனால், இப்படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் இருக்கிறதா என்பதை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.