

ரஜினியின் ‘காலா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கற்றவை பற்றவை’ பாடலை, டீஸர் வெளியாவதற்கு 2 நாட்கள் முன்பு அமர்ந்து, இயக்குநர் பா.இரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் கபிலன் ஆகிய மூவரும் உருவாக்கியுள்ளனர். பாடல் உருவாக்கம் குறித்து பாடலாசிரியர் கபிலன் மேலும் கூறியதாவது:
‘வா உன்னையும் மண்ணையும் வென்று வா, தீராத ஒரு தேவையைக் கொண்டு வா, நூறாயிரம் ஆண்டுகள் போதுமே, ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய்..’ என்று தொடங்கி ‘கற்றவை பற்றவை’ என்று பாடல் நீளும்.என் கல்லூரி காலகட்டமான 20, 22 வயதுகளில் எழுதிய கவிதைகள் முதல்முறையாக ‘காலா’ பட பாடலில்தான் இடம்பெற்றுள்ளன. படத்தில் 4 நிமிடங்கள் வரும் பாடல் இது. மலேசியன் ராப் இசை பாடகர் யோகி பி பாடியுள்ளார். பாடலை ரஜினி சார் வெகுவாக பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.