

அடுத்ததாக ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார் '8 தோட்டாக்கள்' படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஸ்ரீகணேஷ். '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், அபர்ணா பாலமுரளி, மைம் கோபி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
க்ரைம் த்ரில்லரான இந்தப் படம், வித்தியாசமான கதைக்களத்தால் அனைவராலும் ஈர்க்கப்பட்டிருந்தது. படம் ரிலீஸாகி ஓராண்டு ஆகப்போகும் நிலையில், அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஸ்ரீகணேஷ்.
அவருடைய அடுத்த படம் பற்றி 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்ட போது, "என்னுடைய அடுத்த படத்தில் அதர்வா நடிக்க இருக்கிறார். திரைக்கதை உருவாக்கம் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இருக்கிறது. விரைவில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாக இருக்கிறது" என்கிறார் ஸ்ரீகணேஷ்.