

தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் உருவாகி வரும் சாவித்ரியின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டப் படம் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. தனது தாத்தா நாகேஸ்வர ராவ் கதாபாத்திரத்தில் நாக சைத்தான்யா நடித்தக் காட்சிகள்தான் இறுதிகட்ட காட்சிகளாக சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் சமந்தா ஒரு பத்திரிகையாளராக நடிக்கிறார். சாவித்ரி நடித்துக்கொண்டிருந்த நாட்களில் அவரைப் பற்றி மதுரவாணி என்ற பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தை மையமாக வைத்துதான் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமந்தா அந்த மதுரவாணி கதாபாத்திரத்தில்தான் நடிப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.