

விஷ்ணு விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ‘கவரிமான் பரம்பரை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விஷ்ணு விஷால் நடிப்பில் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ராட்ச்சசன்’ மற்றும் ‘ஜகஜால கில்லாடி’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ மற்றும் ‘ராட்ச்சசன்’ ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து எழில் - விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகிவரும் படம் இது. ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து வெங்கட் ராதாகிருஷ்ணன் என்ற புதுமுக இயக்குநரின் படத்தில் நடிக்க இருக்கிறார் விஷ்ணு விஷால். ‘கவரிமான் பரம்பரை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.