டொரான்டோ பட விழாவில் சினிமா ஆர்வலர்களைக் கவர்ந்த காக்கா முட்டை

டொரான்டோ பட விழாவில் சினிமா ஆர்வலர்களைக் கவர்ந்த காக்கா முட்டை
Updated on
1 min read

டொரொன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'காக்கா முட்டை' படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. உலக சினிமா ஆர்வலர்கள் பலரும் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் தனுஷும் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'காக்கா முட்டை'. இரண்டு சிறுவர்கள் இப்படத்தில் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, எம்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார். கிஷோர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. டீஸர், ட்ரெய்லர் என எதுவுமே வெளியாகவில்லை.

இந்நிலையில், டொரொன்டோ திரைப்பட விழாவில் செப்டம்பர் 5, 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் திரையிட இப்படம் தேர்வாகி இருந்தது.

இப்படத்தினை பார்த்தவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது சுருக் விமர்சனங்களை எழுதி வருகிறார்கள். The Crow's Egg என்ற தலைப்பில், ட்விட்டர் தளத்தில் தேடினால் பார்க்கலாம்.

மேலும், உலக சினிமா சார்ந்த சில ஆங்கில வலைதளங்கள் 'காக்கா முட்டை' படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்கள்.

"இவர்கள் கோடீஸ்வர்கள் அல்ல, ஆனால்... பொழுதுபோக்கால் போதுமான அளவில் மகிழ்விக்கக் கூடிய தெருக்கோடி வசீகரர்கள்!" என்று கதாப்பாத்திரங்களை முன்வைத்து 'காக்கா முட்டை' படத்தை சிலாகித்திருக்கிறது 'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்'.

டொரொன்டோ திரைப்பட விழாவில் படத்தின் இயக்குநர் மணிகண்டன் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிமாறன் கலந்து கொண்டார்கள். 'அனேகன்' படப் பணிகள் இருந்ததால், தனுஷ் கலந்துகொள்ளவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in