

ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் சாமி 2 படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே மீதமுள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது. வேலை நிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்ததும் அடுத்த ஒரு வாரத்தில் படத்தை முடித்து ரிலீஸ் உள்ளிட்ட இறுதிகட்ட வேலைகளில் ஹரி இறங்குகிறார்.